188சீமாலிகன் அவனோடு
      தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணிச்
      சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே
      அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்
      இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்             (8)