1883தன் மகன் ஆக வன் பேய்ச்சி தான் முலை உண்ணக் கொடுக்க
வன் மகன் ஆய் அவள் ஆவி வாங்கி முலை உண்ட நம்பீ
நன் மகள் ஆய்மகளோடு நானில-மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே            (7)