1892கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு
நான் அவல் அப்பம் தருவன் கருவிளைப்
பூ அலர் நீள் முடி நந்தன்-தன் போர் ஏறே
கோவலனே கொட்டாய் சப்பாணி
      குடம் ஆடீ கொட்டாய் சப்பாணி            (6)