1897எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே?
      -நர நாரணன் ஆய் உலகத்து அறநூல்
சிங்காமை விரித்தவன் எம் பெருமான்
      அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும்
      நெருக்கிப் புக பொன் மிடறு அத்தனைபோது
அங்காந்தவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
      அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (1)