1899 | உளைந்திட்டு எழுந்த மது-கைடவர்கள் உலப்பு இல் வலியார்-அவர்பால் வயிரம் விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள் உகிரால் அளைந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (3) |
|