190செண்பக மல்லிகையோடு
      செங்கழுநீர் இருவாட்சி
எண் பகர் பூவும் கொணர்ந்தேன்
      இன்று இவை சூட்ட வா என்று
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி
      மகிழ்ந்து உரை செய்த இம் மாலை
பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன்
      பட்டர்பிரான் சொன்ன பத்தே             (10)