1901 | நீண்டான் குறள் ஆய் நெடு வான் அளவும் அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம் தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன் வேண்டாமை நமன்-தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகு ஏழ் ஆண்டான்-அவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (5) |
|