1902 | பழித்திட்ட இன்பப் பயன் பற்று அறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் ஒழித்திட்டு அவரைத் தனக்கு ஆக்கவல்ல பெருமான் திருமால் அது அன்றியும் முன் தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள்-அவை ஆயிரமும் மழுவால் அழித்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (6) |
|