1903படைத்திட்டு அது இவ் வையம் உய்ய முன நாள்
      பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம்
துடைத்திட்டு அவரைத் தனக்கு ஆக்க என்னத்
      தெளியா அரக்கர் திறல் போய் அவிய
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா
      விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
      அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே            (7)