191இந்திரனோடு பிரமன்
      ஈசன் இமையவர் எல்லாம்
மந்திர மா மலர் கொண்டு
      மறைந்து உவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும்
      சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போது இது ஆகும்
      அழகனே காப்பிட வாராய்             (1)