1936 | அரக்கியர் ஆகம் புல் என வில்லால் அணி மதிள் இலங்கையார்-கோனைச் செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற சேவகமோ செய்தது இன்று?- முருக்கு இதழ் வாய்ச்சி முன் கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய் எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் என் செய்வது? எந்தை பிரானே (6) |
|