194கண்ணில் மணல்கொடு தூவிக்
      காலினால் பாய்ந்தனை என்று என்று
எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு
      -இவர் ஆர்?- முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய்
      கண்டாரொடே தீமை செய்வாய்
வண்ணமே வேலையது ஒப்பாய்
      வள்ளலே காப்பிட வாராய்             (4)