196கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்
      கரு நிறச் செம் மயிர்ப் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான்
      என்பது ஓர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ் மணி மாட
      மதிற் திருவெள்ளறை நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க
      அழகனே காப்பிட வாராய்
6