197கள்ளச் சகடும் மருதும்
      கலக்கு அழிய உதைசெய்த
பிள்ளையரசே நீ பேயைப்
      பிடித்து முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன்
      ஒளியுடை வெள்ளறை நின்றாய்
பள்ளிகொள் போது இது ஆகும்
      பரமனே காப்பிட வாராய்             (7)