198இன்பம் அதனை உயர்த்தாய்
      இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்பக் களிறு அட்ட கோவே
      கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே
செம்பொன் மதில் வெள்ளறையாய்
      செல்வத்தினால் வளர் பிள்ளாய்
கம்பக் கபாலி காண் அங்கு
      கடிது ஓடிக் காப்பிட வாராய்             (8)