1982 | செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றி திசை மண்ணும் விண்ணும் உடனே வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய பரு வரை ஒன்று நின்று முதுகில் பரந்து சுழலக் கிடந்து துயிலும் அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன திருமால் நமக்கு ஓர் அரணே 2 |
|