1983தீது அறு திங்கள் பொங்கு சுடர் உம்பர்
      உம்பர்-உலகு ஏழினோடும் உடனே
மாதிரம் மண் சுமந்த வட குன்றும் நின்ற
      மலை ஆறும் ஏழு கடலும்
பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின்
      ஒருபால் ஒடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனம் ஆகி அரண் ஆய மூர்த்தி
      அது நம்மை ஆளும் அரசே 3