1984 | தளை அவிழ் கோதை மாலை இருபால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண் அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று பரியோன் சினங்கள் அவிழ வளை உகிர்-ஆளி மொய்ம்பின் மறவோனது ஆகம் மதியாது சென்று ஓர் உகிரால் பிளவு எழ விட்ட குட்டம்-அது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே 4 |
|