1988முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண
      முதலோடு வீடும் அறியாது
என் இது வந்தது? என்ன இமையோர் திசைப்ப
      எழில் வேதம் இன்றி மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி
      இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ
      அன்னம்-அது ஆய் இருந்து அங்கு அறநூல் உரைத்த
      அது நம்மை ஆளும் அரசே 8