199இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு
      எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்தி நின்று
      தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்
திருக்காப்பு நான் உன்னைச் சாத்த
      தேசு உடை வெள்ளறை நின்றாய்
உருக் காட்டும் அந்தி விளக்கு இன்று
      ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய்            (9)