1990 | கொலை கெழு செம் முகத்த களிறு ஒன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா சிலை கெழு செஞ் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ் கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல் ஒலி கெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர் அவர் ஆள்வர் உம்பர் உலகே 10 |
|