2003நெற்றிமேல் கண்ணானும் நிறை மொழி வாய்
      நான்முகனும் நீண்ட நால் வாய்
ஒற்றைக் கை வெண் பகட்டின் ஒருவனையும்
      உள்ளிட்ட அமரரோடும்
வெற்றிப் போர்க் கடல் அரையன் விழுங்காமல்
      தான் விழுங்கி உய்யக்கொண்ட
கொற்றப்போர் ஆழியான் குணம் பரவாச்
      சிறுதொண்டர் கொடிய ஆறே             (3)