2004பனிப் பரவைத் திரை ததும்ப பார் எல்லாம்
      நெடுங் கடலே ஆன காலம்
இனிக் களைகண் இவர்க்கு இல்லை என்று உலகம்
      ஏழினையும் ஊழில் வாங்கி
முனித் தலைவன் முழங்கு ஒளி சேர் திரு வயிற்றில்
      வைத்து உம்மை உய்யக்கொண்ட
கனிக் களவத் திரு உருவத்து ஒருவனையே
      கழல் தொழுமா கல்லீர்களே             (4)