2005பார் ஆரும் காணாமே பரவை மா
      நெடுங் கடலே ஆன காலம்
ஆரானும் அவனுடைய திரு வயிற்றில்
      நெடுங்காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உணர்விலீர் உணருதிரேல்
      உலகு அளந்த உம்பர் கோமான்
பேராளன் பேரான பேர்கள்
      ஆயிரங்களுமே பேசீர்களே             (5)