2006பேய் இருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின்-மீது
      ஓடிப் பெருகு காலம்
தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன்
      வயிற்று இருத்தி உய்யக்கொண்டான்
போய் இருக்க மற்று இங்கு ஓர் புதுத் தெய்வம்
      கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ-
      மாட்டாத தகவு அற்றீரே?
6