2007மண் நாடும் விண் நாடும் வானவரும்
      தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல்
      தான் விழுங்கி உய்யக்கொண்ட
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்
      கழல் சூடி அவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத
      போது எல்லாம் இனிய ஆறே 7