2008 | மறம் கிளர்ந்த கருங் கடல் நீர் உரம் துரந்து பரந்து ஏறி அண்டத்து அப்பால் புறம் கிளர்ந்த காலத்து பொன் உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி அறம் கிளந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட நிறம் கிளர்ந்த கருஞ் சோதி நெடுந்தகையை நினையாதார் நீசர்-தாமே 8 |
|