201 | வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்கும் கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக் காக்ககில்லோம் உன்மகனைக் காவாய் புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய் (1) |
|