2027வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது-அடியேன்
நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன்
தேம்பல் இளந் திங்கள் சிறைவிடுத்து ஐவாய்ப்
பாம்பின் அணைப் பள்ளிகொண்டாய் பரஞ்சோதீ (7)