203திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு
      தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன்
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய்
      உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்
அருகு இருந்தார் தம்மை அநியாயம்
      செய்வதுதான் வழக்கோ? அசோதாய்
வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய்
      வாழ ஒட்டான் மதுசூதனனே             (3)