2033பா இரும் பரவை-தன்னுள்
      பரு வரை திரித்து வானோர்க்கு
ஆய் இருந்து அமுதங் கொண்ட
      அப்பனை எம் பிரானை
வேய் இருஞ் சோலை சூழ்ந்து
      விரி கதிர் இரிய நின்ற
மா இருஞ் சோலை மேய
      மைந்தனை-வணங்கினேனே             (3)