2036மூவரில் முதல்வன் ஆய
      ஒருவனை உலகம் கொண்ட
கோவினை குடந்தை மேய
      குரு மணித் திரளை இன்பப்
பாவினை பச்சைத் தேனை
      பைம் பொன்னை அமரர் சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர்
      என் சொல்லிப் புகழ்வர் தாமே?            (6)