2037இம்மையை மறுமை-தன்னை
      எமக்கு வீடு ஆகி நின்ற
மெய்ம்மையை விரிந்த சோலை
      வியன் திரு அரங்கம் மேய
செம்மையை கருமை-தன்னை
      திருமலை ஒருமையானை
தன்மையை நினைவார் என்-தன்
      தலைமிசை மன்னுவாரே            (7)