2038வானிடைப் புயலை மாலை
      வரையிடைப் பிரசம் ஈன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றை
      திருவினை மருவி வாழார்-
மானிடப் பிறவி அந்தோ
      மதிக்கிலர் கொள்க-தம் தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு
      உறுதியே வேண்டினாரே             (8)