2040சித்தமும் செவ்வை நில்லாது
      என் செய்கேன் தீவினையேன்?
பத்திமைக்கு அன்பு உடையேன்
      ஆவதே பணியாய் எந்தாய்
முத்து ஒளி மரகதமே
      முழங்கு ஒளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால்
      யாதும் ஒன்று அறிகிலேனே             (10)