2042ஆவியை அரங்க மாலை
      அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மை இல் தொண்டனேன் நான்
      சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்தவாறு என்று
      அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவிபோல் வண்ணர் வந்து என்
      கண்ணுளே தோன்றினாரே             (12)