2043இரும்பு அனன்று உண்ட நீரும்
      போதரும் கொள்க என்-தன்
அரும் பிணி பாவம் எல்லாம்
      அகன்றன என்னை விட்டு
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த
      அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டுகொண்டு என்
      கண்-இணை களிக்குமாறே             (13)