2045முன் பொலா இராவணன்-தன்
      முது மதிள் இலங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு
      அடி-இணை பணிய நின்றார்க்கு
என்பு எலாம் உருகி உக்கிட்டு
      என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு
      ஆட்டுவன் அடியனேனே             (15)