2049பிண்டி ஆர் மண்டை ஏந்தி
      பிறர் மனை திரிதந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த
      ஒருவன் ஊர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம்
      கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால்
      மற்றையார்க்கு உய்யல் ஆமே?            (19)