2052 | பார்-உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி பல் வேறு சமயமும் ஆய்ப் பரந்து நின்ற ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்போது ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செந்தீ ஒன்று மா கடல் உருவம் ஒத்துநின்ற மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி முகில் உருவம் எம் அடிகள் உருவம்-தானே (2) |
|