2053திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
      திரேதைக்கண் வளை உருவாய்த் திகழ்ந்தான் என்றும்
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
      பெருமானைக் கரு நீல வண்ணன்-தன்னை
      ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது
      ஊழிதோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கரு வடிவில் செங் கண்ண வண்ணன்-தன்னை-
      கட்டுரையே-யார் ஒருவர் காண்கிற்பாரே?             (3)