2054 | இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன்-தன்னை இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்து ஆய் செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி திசை நான்கும் ஆய் திங்கள் ஞாயிறு ஆகி அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே (4) |
|