2056 | அலம்புரிந்த நெடுந் தடக்கை அமரர்-வேந்தன் அம் சிறைப் புள் தனிப் பாகன் அவுணர்க்கு என்றும் சலம்புரிந்து அங்கு அருள் இல்லாத் தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப் பூங் கோவலூர் தொழுதும்-போது நெஞ்சே (6) |
|