2057வற்பு உடைய வரை நெடுந் தோள் மன்னர் மாள
      வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு
வெற்பு உடைய நெடுங் கடலுள் தனி வேல் உய்த்த
      வேள் முதலா வென்றான் ஊர்-விந்தம் மேய
கற்பு உடைய மடக் கன்னி காவல் பூண்ட
      கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி
      பொற்பு உடைய மலை-அரையன் பணிய நின்ற
      பூங் கோவலூர்-தொழுதும்-போது நெஞ்சே             (7)