| 2059 | வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய் கொங்குத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன் குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான் பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே (9) |
|