2061 | பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள் எள் துணைப் போது என் குடங்கால் இருக்ககில்லாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மட மானை இது செய்தார்-தம்மை மெய்யே கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்!- கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே? (11) |
|