2062 | நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும் அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும் என் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன் இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே (12) |
|