2063 | கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய் என்னும் காமரு பூங் கச்சி ஊரகத்தாய் என்னும் வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும் மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும் மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும் சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே (13) |
|