2064 | முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே (14) |
|