2066 | கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும் மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும் வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும் வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும் விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும் துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும் துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே (16) |
|